News August 12, 2025
SPORTS ROUNDUP: WC ODI-யை வெல்வோம்.. ஹர்மன்பிரீத் கவுர்

◆சின்சினாட்டி ஓபன்: 3 மணி நேரம் நடந்த போட்டியில் அரினா சபலேங்கா(பெலாரஸ்) (7-3) 4-6 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி எம்மா ராடுகானுவை (பிரிட்டன்) வீழ்த்தினார்.
◆மகளிர் உலக கோப்பையை கண்டிப்பாக வெல்வோம்.. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதி.
◆WC T20 2026 தொடருக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
◆ கர்நாடகாவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. 80,000 இருக்கை வசதி இருக்கும்
Similar News
News August 12, 2025
BREAKING: ஸ்டிரைக் தொடரும்.. தமிழக அரசுக்கு நெருக்கடி

பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், பல லட்சம் பேர் வந்து செல்லும் பொதுவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் சற்றுமுன் அழைப்பு விடுத்தது. ஆனால், அதை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள், ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.
News August 12, 2025
தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
News August 12, 2025
வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.