News August 17, 2025
SPORTS ROUNDUP: 6-வது இடம் பிடித்த குகேஷ்!

◆ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக உடற்தகுதியை எட்டினார் சூர்யகுமார் யாதவ்.
◆சின்சினாட்டி ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர்(இத்தாலி)
◆ஆஸி. அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை விளாசிய விராட் கோலியின்(12 சிக்ஸர்கள்) சாதனையை டெவால்ட் பிரேவிஸ்(14 சிக்ஸர்கள்) முறியடித்தார்.
◆அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் செஸ் போட்டியில் குகேஷ் 18 புள்ளிகளுடன் 6-வது இடம் பிடித்தார்.
Similar News
News August 17, 2025
டெய்லி எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்றீங்க’னு தெரியணுமா?

ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நீங்க போன் யூஸ் பண்றீங்க’னு, எந்த App-ல் மூழ்கி போயிருக்கீங்க’னு தெரிஞ்சிக்கணுமா? உங்க போனிலேயே இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் Settings-> Digital Wellbeing option சென்று பாருங்க. இது Iphone-களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நீங்க எவ்வளவு நேர விரையும் பண்றீங்க என புரியும். SHARE IT.
News August 17, 2025
கீ கொடுத்தால் ஆடும் பொம்மை தேர்தல் ஆணையம்: ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக BJP மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலம் CPI மாநாட்டில் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக் கூத்தாக்கி விட்டதாக சாடினார். ECI ஆணையர் நியமனத்தில் சதி செய்கிறார்கள் என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்கிறார்கள் என கூறினார். BJP உடன் இணைந்து ECI வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக INDIA கூட்டணியினர் கூறி வருகின்றனர்.
News August 17, 2025
மீண்டும் வான்வழி தாக்குதல்: கர்ப்பிணி உள்பட 21 பேர் பலி

நமது அண்டை நாடான மியான்மரில் 2021 முதலே ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ராணுவம் தரப்பில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் பள்ளி மீது குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று மொகோக் நகரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. So sad..!