News September 13, 2025
Sports Roundup: பாக்சிங்கில் இந்திய மகளிர் அசத்தல்

* உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 57Kg எடைப்பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியா, 80Kg எடைப்பிரிவில் நுபுர் ஷியோரன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். * டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம். * ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம். * புரோ கபடி லீக்கில் பெங்களூரு புல்ஸ் 28-23 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.
Similar News
News September 13, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலவேம்பு!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➥நிலவேம்பை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால், பித்தம் குறையும்.
➥நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து, காலை மாலை என குடித்து வந்தால், காய்ச்சல் குணமாகும்.
➥நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
➥நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். Share it to friends.
News September 13, 2025
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: CM ஸ்டாலின்

செப்.15-ம் தேதி தயாராக இருக்க திமுகவினருக்கு ஸ்டாலின் நாள்தோறும் புதிய கட்டளைகளை விடுத்து வருகிறார். தற்போது, ‘தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்க தயாராகுங்கள் என ஆணையிட்டுள்ளார். அண்ணாவின் பிறந்தநாளில் 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.
News September 13, 2025
மத்திய அரசில் 1,543 வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனில், களப்பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1,543 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்) பட்டமும், 1 வருட அனுபவமும் அவசியம். இதற்கு, மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு செப்.17-க்குள் https://www.powergrid.in/en -ல் விண்ணப்பியுங்கள். SHARE பண்ணுங்க.