News September 9, 2025

SPORTS ROUNDUP: ஒலிம்பிக் legend-ஐ வீழ்த்திய இந்திய வீராங்கனை

image

*உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 57 கிலோ எடைப்பிரிவில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான ரோமியோவை(பிரேசில்) 5:0 என்ற கணக்கில் வீழ்த்தி ஜாஸ்மின் லம்போரியா(இந்தியா) காலிறுதிக்கு முன்னேறினார்.
*CAFA Nations Cup கால்பந்து: ஓமன் அணியை பெனால்டி சூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
*PKL கபடி 2025: பெங்களூரு புல்ஸ் 40- 33 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது.

Similar News

News September 9, 2025

BREAKING: முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்

image

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக செங்கோட்டையன் ஒப்புக்கொண்டுள்ளார். மக்கள் நலனுக்காகவும், இயக்கம் (ADMK) வலுபெறவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அறிவித்துள்ளார். மேலும், அமித்ஷா உடன் ‘தனது அரசியல் நிலைபாடு & தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

விஜயகாந்த் வீட்டில் பெரும் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

image

விஜயகாந்தின் மூத்த சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரையில் நாளை நடைபெறும் என்று பிரேமலதா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News September 9, 2025

தமிழ் சினிமாவும் ₹1000 கோடி வசூலும்..SK சொன்ன பாய்ண்ட்

image

தமிழ் சினிமாவுக்கு ₹1,000 கோடி வசூல் கனவாக இருக்கும் நிலையில், அது குறித்து SK சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழில் பான் இந்தியாவுக்கான சரியான ஸ்கிரிப்ட் இல்லை என்றும், மும்பை, பெங்களூரு போல டிக்கெட் விலை இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால், டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என தான் கூறவில்லை என்று விளக்கமளித்தவர் ஹிந்தி மார்க்கெட்டை பிடிப்பது அவசியம் என சுட்டிக்காட்டினார்.

error: Content is protected !!