News September 22, 2025
Sports Roundup: ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு தங்கம்

*உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், 42 கிமீ மாரத்தானில் இந்தியாவின் ஆனந்த் வேல்குமார் தங்கம் வென்றார். *சீனா பேட்மிண்டனில் (பாரா) இந்தியாவின் சுமதி சிவன், சீன வீராங்கனை வீழ்த்தி தங்கம் வென்றார். *உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம். * அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Similar News
News September 22, 2025
நடிகர் – நடிகைகள் மீது அவதூறு பரப்பினால் சிறை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: *யூடியூப்பில் உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 3 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். *மன உளைச்சலுக்கு உள்ளான உறுப்பினருக்கு அந்த நபர் ₹3 லட்சம் மான நஷ்ட ஈட்டு வழங்க வேண்டும். *அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும்.
News September 22, 2025
வரலாற்றில் இன்று

➤1931 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்.
➤1941 – உக்ரைனில் 6,000 யூதர்கள் நாஜி படையால் கொல்லப்பட்டனர்.
➤1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை அடைந்தது.
➤1965 – இந்திய-பாகிஸ்தான் போர் ஐநாவால் முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
News September 22, 2025
தவறான யூடியூபர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் : வடிவேலு

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வடிவேலு, இன்றைய சினிமா கலைஞர்களின் நிலை குறித்து பேசியுள்ளார். திரைத்துறையினரிடம் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளதாக கூறிய அவர், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் திரையுலகினர் பற்றி அவதூறாக சில பேசுவதாகவும், நாம் தவறாக பேசுபவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் எனவும் கூறினார்.