News October 12, 2025
Sports Roundup: வலுதூக்குதலில் இந்தியாவுக்கு தங்கம்

*மகளிர் WC-ல், அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் படைத்துள்ளார். *உலக பாரா ஜூனியர் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வினய் தங்கம் வென்றார். *தேசிய ஜூனியர் தடகளத்தில், ஹிமான்ஷு 80.38மீ தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்தார். *PAK Vs SA முதல் டெஸ்ட் லாகூரில் இன்று தொடக்கம். *புரோ கபடியில் இன்று பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ் மோதல்.
Similar News
News March 4, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 3 நாள்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $222.88 (இந்திய மதிப்பில் ₹20,426) குறைந்து $5,129.72-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $6 குறைந்து $83.21-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
News March 4, 2026
திமுகவுக்கு இந்த அகம்பாவம் இல்லை: ரகுபதி

NDA கூட்டணி என்பது இடியாப்ப சிக்கல் போன்றது. அதில், யார் பெரியவர் என்பது இதுவரை தெரியவில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அதையும், திமுக கூட்டணியையும் ஒப்பிட முடியாது என்ற அவர், மக்களிடம் சாதனைகளை சொல்லியே வாக்குகளை பெறமுடியும் என்றார். மேலும், தேர்தலில் சவால்கள் இல்லை என்று அகம்பாவமாக சொல்ல முடியாது எனவும் திமுக எது வந்தாலும் சமாளிக்கும் என்றும் பேசியுள்ளார்.
News March 4, 2026
மறந்துக்கூட வீட்டில் லட்சுமி படத்தை இங்க வெச்சுராதீங்க!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் லட்சுமியின் படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு திசையில் இருந்து தெற்கு பார்த்தபடி வைக்க வேண்டுமாம். அதுவே, மங்களகரமானது என சொல்லப்படுகிறது. இதுதவிர, தாமரை மலரில் இருக்கும் லட்சுமி படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை உள்ளது. தவறுதலாக கூட வடக்கு பார்த்தபடி வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.


