News October 20, 2025

Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

image

*பால்கன் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில், அமன் கடியான் வெண்கலம் வென்றுள்ளார். *நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20-ல் இங்கிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. *ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. *US ஓபன் ஸ்குவாஷில், இந்தியாவின் அபய் சிங் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Similar News

News October 21, 2025

இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு

image

இந்திய கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரஸூல், விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காஷ்மீரில் இருந்து இந்திய அணியில் இடம்பிடித்த முதல் வீரரான இவர், ஒரு டி20 மற்றும் ஒரு ODI போட்டியில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் விளையாடிய முதல் காஷ்மீர் வீரரும் இவர் தான். 17 ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட் விளையாடி வரும் இவர் 352 விக்கெட்களுடன் 5,648 ரன்கள் குவித்துள்ளார்.

News October 21, 2025

பட்டாசுகள் வெடித்ததால் அதிகரித்த காற்று மாசு

image

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு சராசரியாக 350ஆக பதிவாகியுள்ளது. இது நாம் சுவாசிக்கும் காற்று உகந்ததாக இல்லை என்பதை குறிக்கிறது. எங்கும் புகைமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

News October 21, 2025

ராசி பலன்கள் (21.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!