News October 31, 2025
Sports 360°: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்

*ஆசிய யூத் கேம்ஸ் மகளிர் குத்துச்சண்டை, 46 கிலோ எடை பிரிவில் குஷி சந்த், 50 கிலோ எடை பிரிவில் அஹானா சர்மா, 54 கிலோ எடை பிரிவில் சந்திரிகா பூஜாரி தங்கப் பதக்கம் வென்றனர். *ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். *பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் பக்தி சர்மா வெள்ளி வென்றார். *கனடா ஓபன் ஸ்குவாஷில், அனாஹத் சிங் அரையிறுதியில் தோல்வி.
Similar News
News October 31, 2025
23 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் எடுத்த முடிவு

‘சியான் 63’ படத்தை இயக்கவுள்ள போடி ராஜ்குமார், 3 குறும்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். உதவி இயக்குநராகவும் இருந்ததில்லை. இவ்வாறு அறிமுக இயக்குநருடன் விக்ரம் கைகோர்த்திருப்பது 2-வது முறையாகும். 23 ஆண்டுகளுக்கு முன்பு, பாலாஜி சக்திவேல் என்ற அறிமுக இயக்குநரின் ‘சாமுராய்’ படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஹிட்டாகவில்லை. மீண்டும் அறிமுக இயக்குநருடன் விக்ரம் காம்போ எப்படி இருக்கும்?
News October 31, 2025
அதிமுகவில் சர்ப்ரைஸ் நடக்கும்: சசிகலா

மீண்டும் தான், அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார். அதிமுகவில் விரைவில் சர்ப்ரைஸ் நடக்கும் என்றும் சூசகமாக பேசியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது OPS, செங்கோட்டையன், TTV தினகரன் ஆகியோர் ஒன்றாக இருந்த நிலையில், சசிகலாவின் இந்த பேச்சு அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. இதனால் அதிமுகவில் புதிய அணியாக உருவாகுமா (அ) தமிழக அரசியலில் தனிக் கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News October 31, 2025
ஓய்வு பெறுகிறாரா ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி?

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக, ஓய்வில் இருந்தார். பின்னர், இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் விளையாடினார். 5 ரன்களிலேயே பெவிலியன் திரும்பிய அலிசாவுக்கு, ஆஸி.,வின் தோல்வி பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இதுவே தனது கடைசி ODI உலகக் கோப்பை போட்டி என அவர் தெரிவித்துள்ளார். இது அலிசாவின் ஓய்வுக்கான சமிக்ஞை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


