News September 27, 2025
Sports Roundup: வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

*தென் கொரியாவில் நடைபெறும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் இரட்டையரில் இந்தியாவின் ஷீதல் தேவி – சரிதா இணை வெள்ளி வென்றது. *கலப்பு இரட்டையரில் ஷீதல் தேவி – தோமன் குமார் இணை வெண்கலம் வென்றது. *Koahsiung மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் இஷாராணி தோல்வி. *உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ஜூனியர், 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா – கபில் இணை தங்கம் வென்றது.
Similar News
News September 27, 2025
மீளா துயரில் இயக்குநர் பாரதிராஜா!

<<15986882>>நடிகர் மனோஜ்<<>> மறைவுக்கு பிறகு இயக்குநர் பாரதிராஜா மீளா துயரில் ஆழ்ந்துள்ளதாக அவரது சகோதரர் ஜெயராஜ் உருக்கமாக பேசியுள்ளார். தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர், பணம், புகழ் இருந்தும் தனது மகனை காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வில் பாரதிராஜா தவிப்பதாக கூறியுள்ளார். சில நாள்கள் நினைவாற்றல் பாதிக்கப்பட்டதால் மலேசியாவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
News September 27, 2025
ஜாலியாக சுற்றிவர சூப்பர் ரயில் பயணங்கள்

இந்தியாவில் சுவாரசியமான சாலை வழி பயணங்கள் ஏராளமானவை உள்ளன. அதேபோல் ரயில் பயணங்களும் உள்ளன. அதில், ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இயற்கை எழில் கொஞ்சும் சிறந்த ரயில் பயணங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் செய்த பயணம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 27, 2025
TVK Vs DMK இடையே போட்டி: விஜய்

திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற மாட்டோம்; நடைமுறைக்கு எது சாத்தியமோ, அது மட்டுமே தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று விஜய் தெரிவித்துள்ளார். 2026-ல் திமுக – தவெக இடையில்தான் போட்டி எனக் கூறிய அவர், ஆட்சிக்கு வந்த உடனே பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, தரமான கல்வி, மக்களுக்கான மருத்துவ வசதி போன்ற அனைத்தையும் உடனே தவெக செய்யும் என உறுதியளித்தார்.