News October 29, 2025

Sports Roundup: ஸ்குவாஷில் கலக்கும் அனாஹத் சிங்

image

*இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ODI-ல் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. *கனடா ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில், இந்தியாவின் அனாஹத் சிங் உலகின் 7-ம் நிலை வீராங்கனை டினே கிலிஸை நேர் செட்களில் வீழ்த்தினார். *ஜெர்மனியில் நடக்கும் ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி. *காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து நிதிஷ் ரெட்டி விலகல்.

Similar News

News October 30, 2025

டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களுக்கு ₹10,000 கோடி: பியூஷ் கோயல்

image

FFS திட்டத்தின் மொத்த நிதியையும் (₹10,000 கோடி), அடுத்த ஆண்டில் டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெளிநாட்டு சார்பு நிலையை குறைத்து, உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

தமிழ்நாட்டுக்கு SIR அவசியம்: ஜெயக்குமார்

image

வாக்காளர் பட்டியலில் உண்மைத்தன்மை வேண்டுமென்றால் TN-க்கு SIR அவசியம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆய்வின்படி, 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொகுதியிலேயே இல்லாத 40,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் பூத் லெவல் ஆபிசர், கட்சிகளின் ஏஜெண்ட் இணைந்து செயல்பட்டால் வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் பேசியுள்ளார்.

News October 30, 2025

ராசி பலன்கள் (30.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!