News November 10, 2025
Sports Roundup: 6 ரன்களில் அவுட் ஆன ஜெமிமா

*உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். *ஆஸி., மகளிர் பிக்பாஷ் கிரிக்கெட்டில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 ரன்களில் அவுட் ஆனார். *ஆஸி., நடைபெறும் ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஃபைனலில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன் தோல்வியை தழுவினார். *‘பிடே’ உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
Similar News
News November 10, 2025
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 10, 2025
சற்றுமுன்: நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் த்ரிஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
News November 10, 2025
கடலில் மூழ்கிய படகு; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்

மியான்மரின் புத்திடாவுங்கிலிருந்து 300 குடியேறிகளுடன் புறப்பட்ட படகு தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே கடலுக்குள் மூழ்கியது. இச்சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி மாயமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல 2021-ல் மலேசியாவில், புலம்பெயர்ந்தோர் சென்ற கப்பல் மூழ்கியதால் 20 பேர் இறந்தனர்.


