News November 4, 2025

Sports Roundup: ரஞ்சியில் தமிழகம் தொடர்ந்து சொதப்பல்

image

*இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து டிராவிஸ் ஹெட், சீன் அபோட், தன்வீர் சங்கா விடுவிப்பு. *SA அணிக்கு எதிரான 2-வது அன்அபிசியல் டெஸ்டில் குல்தீப் யாதவ் விளையாடவுள்ளார். *விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழகம் 210 ரன்கள் பின்தங்கியுள்ளது. *அமெரிக்காவுக்கு எதிரான ODI-ல் UAE 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி.

Similar News

News November 4, 2025

குழந்தைகளின் காதில் முத்தம் கொடுப்பீர்களா? ஜாக்கிரதை

image

குழந்தைகளின் காதின் திறப்பில் யாராவது முத்தமிடும்போது உருவாகும் சக்‌ஷன் அழுத்தம் (Suction Pressure), காதின் உள்ளமைப்பை பாதித்து கேட்கும் திறனை இழக்கச் செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது Cochlear Ear-Kiss Injury எனப்படும் மருத்துவநிலை. இவ்வாறு முத்தமிடுவதால், காதுத் தண்டு சேதம், தற்காலிக அல்லது நிரந்தர காது கேளாமை போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 4, 2025

பிரபல நடிகை காலமானார்

image

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை டயான் லாட் (89) காலமானார். ‘Alice Doesn’t Live Here Anymore’ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘Wild at Heart’ (1990), ‘Rambling Rose’ (1991) திரைப்படங்களுக்காக அவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கள் தெரிவித்து வருகின்றனர். #RIP

News November 4, 2025

ED மூலம் அச்சுறுத்தும் பாஜக: கே.பாலகிருஷ்ணன்

image

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை எதிர்த்து யார் பேசினாலும், அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கே.என்.நேரு உண்மையிலேயே உழல் செய்திருந்தால் விசாரிக்கலாம். ஆனால், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ED-யை பாஜக பயன்படுத்துவதாக சாடிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, மக்களிடம் தங்களுக்கு ஆதரவை தேடும் தகிடுதத்தம் வேலை இது என விமர்சித்தார்.

error: Content is protected !!