News August 8, 2025

SPORTS ROUND UP: கால்பந்து தரவரிசையில் IND முன்னேற்றம்!

image

◆கனடா ஓபன் டென்னிஸ்: எம்போகா (கனடா), நவோமி ஒசாகா (ஜப்பான்)-ஐ 2- 6, 6- 4, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
◆நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் சுருண்டது. NZ தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
◆மகளிர் கால்பந்து தரவரிசையில் இந்திய அணி, 7 இடங்கள் முன்னேறி, 63-வது இடத்தை பிடித்துள்ளது.

Similar News

News August 8, 2025

இறங்குமுகத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள்!

image

USA வரி விதிப்பு சர்ச்சையால் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை கண்டுள்ளன. இன்றும் சரிவுடன் சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிந்து 80,478 புள்ளிகளிலும், நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 24,544 புள்ளிகளிலும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. HDFC Bank, Bharti Airtel, Cipla, Hindalco உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News August 8, 2025

எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை: EPS

image

திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க பல கட்சிகள் தங்களுடன் பேசி வருவதாக EPS கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இதுவரை எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு அதிமுக அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், EPS எந்த கட்சிகளையும் தாங்கள் அழைக்கவில்லை என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

News August 8, 2025

நகத்தில் இப்படி இருக்கா.. கவனியுங்க!

image

ஒருவரின் கை நகத்தின் கலரை வைத்தே அவரின் ஹெல்த் பற்றி சொல்லிவிடலாம் தெரியுமா?
✦நகத்தின் நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்னை
✦கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயாக இருக்கலாம்
✦மஞ்சள் நிறம்: தைராய்டு பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு
✦வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது.
✦ஆரோக்கியமான நகங்களின் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.

error: Content is protected !!