News November 22, 2025

SPORTS 360°: WC மகளிர் கபடியில் இந்தியாவுக்கு 4-வது வெற்றி

image

*ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவிடம் தோல்வியடைந்தது. *மகளிர் உலகக்கோப்பை கபடியில் உகண்டா அணியை வீழ்த்திய இந்தியா 4-வது தொடர் வெற்றியை பெற்றது. *அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் 367 ரன்கள் முன்னிலை பெற்று வங்கதேசம் வலுவான நிலையில் உள்ளது. *ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

Similar News

News February 15, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 610
▶குறள்:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
▶பொருள்: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

News February 15, 2026

‘ஜன நாயகன்’ இப்போ வராது.. விநியோகஸ்தர் கொடுத்த ஷாக்

image

‘ஜன நாயகன்’ வழக்கை திரும்பப்பெற்ற தயாரிப்பு நிறுவனம், மீண்டும் சென்சார் போர்டிடமே சரணடைந்துவிட்டது. இதனால் விரைவில் படம் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 30-ம் தேதி வரை ‘ஜன நாயகன்’ ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்றும், அதனால் எல்லோரும் டிக்கெட்டுக்கு Refund வாங்கிக்கொள்ளுங்கள் என ஜனநாயகனை கனடாவில் ரிலீஸ் செய்யும் York cinemas கூறியுள்ளது.

News February 15, 2026

40 CEO-களை நேரடியாக சந்திக்கும் PM மோடி

image

டெல்லியில் பிப்.16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை India AI Impact உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதை தொடங்கி வைக்கும் PM மோடி, சுமார் 35-40 தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO-களை சந்தித்து பேசுகிறார். இம்மாநாட்டில் AI வளர்ச்சி மற்றும் அதனால் உண்டாகும் வேலைவாய்ப்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதங்கள் இடம்பெற உள்ளன. இம்மாநாடு முடிவில் ₹8.3 லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!