News March 4, 2026
SPORTS 360°: ஸ்மிருதி மந்தனா மீண்டும் நம்பர் 1

*ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் முதல் சுற்றில், லக்ஷயா சென் 23-21, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் உலகின் நம்.1 வீரர் ஷி யூவை வீழ்த்தினார் * கலப்பு இரட்டையரில் துருவ், தனிஷா இணை 2-வது சுற்றுக்கு தகுதி *ஐசிசி மகளிர் ODI பேட்டர் தரவரிசையில் ஸ்மிருதி மந்தா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் * U-17 நட்புறவு கால்பந்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது.
Similar News
News April 5, 2026
3 நாள்களில் 3,000 வேட்புமனு தாக்கல்

மார்ச் 30-ல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நாளையுடன் (ஏப்.6) முடிவடைகிறது. விடுமுறை நாள்கள் தவிர்த்து 3 நாள்கள் வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,000 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 1,639 வேட்பு மனுக்கள் வந்துள்ளன. நாளை காலை 11-3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும். சரியாக 3 மணிக்கு அலுவலக நுழைவாயில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2026
அவிநாசியில் தாமரை மலருமா? எஸ்.பி.வேலுமணி பளீச்

அதிமுக கோட்டையாக கருத்தப்பட்ட அவிநாசி தொகுதியில் பாஜகவின் எல்.முருகன் களமிறங்குகிறார். ஆனால், இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த மக்கள், இம்முறை தாமரை சின்னத்தில் வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரட்டை இலை போல தாமரையும் அனைத்து மக்களுக்கும் அறியப்பட்ட சின்னம் என்பதால், மக்களிடம் எந்த குழப்பமும் வராது எனக் கூறிய எஸ்.பி.வேலுமணி, கொங்கு மண்டலத்தை அதிமுக கைப்பற்றும் என்றார்.
News April 5, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹2,500.. காங்கிரஸ் வாக்குறுதி!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதந்தோறும் ₹2,500-க்கு இலவச மளிகை பொருள்கள் வழங்கப்படும் என காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், *1-ம் வகுப்பு முதல் PhD வரை இலவச கல்வி. *தாலிக்கு தங்கம் திட்டம். *2029-ம் ஆண்டு ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.


