News November 9, 2025
Sports 360°: ரஞ்சியில் தமிழகம் சொதப்பல் பேட்டிங்

*ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முதல் இன்னிங்ஸில் TN 182 ரன்களுக்கு ஆல் அவுட். *தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ODI-ல் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி. *2-வது பயிற்சி டெஸ்டில் SA A-வுக்கு 417 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா A. *உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிளில் இளவேனில் வெண்கலம் வென்றார். *50மீ பிஸ்டலில் ரவீந்தர் சிங்கிற்கு தங்கம் கிடைத்தது.
Similar News
News November 9, 2025
பைசன் OTT ரிலீஸ் தேதி!

துருவ் விக்ரம், பசுபதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’, பெரும் வெற்றி படமாக அமைந்தது. விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட இப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT-யில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம், ₹50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. ‘டியூட்’ படமும் நவம்பர் 14-ம் தேதி தான் OTT-யில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

மீன் விலை இந்த வாரமும் கிடுகிடுவென உயர்ந்து அசைவ பிரியர்களை அதிர வைத்துள்ளது. காசிமேட்டில் முதல் தர வஞ்சிரம் 1 கிலோ ₹2,500-க்கும், கொடுவா ₹800-க்கும் விற்பனையாகிறது. பால் சுறா, சீலா, சங்கரா மீன் கிலோ தலா ₹600, பாறை ₹800, நெத்திலி – ₹400, நண்டு – ₹600, பண்ணா – ₹500-க்கு விற்பனையாகிறது. கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மீன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உங்கள் ஊரில் என்ன விலை?
News November 9, 2025
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது!

SIR-க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், CM ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், SIR பணிகளை மேற்பார்வை செய்வது, பூத் கமிட்டி, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


