News January 20, 2026
Sports 360°: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

*SAFF ஃபுட்ஸல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது *ஆசிய மகளிர் ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் பிப்.22-ல் தாய்லாந்தில் தொடங்குகிறது *சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் விளையாடுவார் என தகவல் *T20 உலகக் கோப்பை தொடரின், முதல் சில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என அறிவிப்பு
Similar News
News February 14, 2026
‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ போல் மகளிருக்கு பணம்: அன்பில்

தேர்தல் பயம் எங்களுக்கு கிடையாது, அது எதிரணியினருக்குத்தான் இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையை முடக்க சூழ்ச்சி நடைபெறுவதால், ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்று மகளிருக்கு பணம் வரவு வைக்கப்பட்டது என்றார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட BJP தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வந்தால், திமுக 200 இடங்களில் எளிதாக வெற்றிபெறும் எனக் கூறினார்.
News February 14, 2026
CM-க்கு தைரியம் இருந்தால் இத பண்ணட்டும்: நிர்மல் குமார்

பாஜகவோடு திமுக நல்ல உறவில் இருப்பதாக CTR நிர்மல் குமார் கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையை யாரோ முடக்கப் பார்க்கிறார்கள் என CM ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக கூறுவதாக சொன்ன அவர், தைரியம் இருந்தால் யார் அதை முடக்க பார்த்தார்கள் என சொல்லட்டும் என் சவால் விட்டுள்ளார். மேலும், மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளை ஏமாற்றிவிட்டு, பல நூறுகளை கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
News February 14, 2026
FLASH: திமுகவில் இணைந்த EX மத்திய அரசு அதிகாரி!

விருப்ப ஓய்வு பெற்ற மத்திய GST நுண்ணறிவு முதன்மை கூடுதல் தலைமை இயக்குநர் பாலமுருகன் IRS, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மதுரை காமராஜர் பல்கலை.யில் பயின்ற இவர், மக்களுக்கான சேவையை மேம்படுத்துதல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கவரி, GST உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.


