News January 28, 2026
SPORTS 360°: செஸ்ஸில் குகேஷ் அபாரம்

*இலங்கைக்கு எதிரான 3-வது ODI-ல் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது *ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி தேர்வு *டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக, சென்னையில் 4 பயிற்சி போட்டியில் நடைபெறவுள்ளன *டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 8-வது சுற்றில் சுலோவேனியா வீரர் பெடோசீவை இந்தியாவின் குகேஷ் வீழ்த்தினார்.
Similar News
News February 17, 2026
நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியாத காங்.: தமிழிசை

செல்வப்பெருந்தகையால் தங்கள் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகளை பற்றி ஆலோசிக்க மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கும் நிலையில்தான் செல்வப்பெருந்தகை உள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக – காங்கிரஸ் மோதலால், இண்டியா கூட்டணி பலவீனமடைந்து வருவதாகவும், அதே சமயம் NDA கூட்டணி பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
AI உதவியால் உலகிற்கான தீர்வை உருவாக்குவோம்: PM

டெல்லியில் 5 நாள் நடைபெறும் சர்வதேச AI உச்சி மாநாட்டை PM மோடி திறந்து வைத்தார். இதுதொடர்பான போட்டோஸை X தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே இருப்பது, இந்தியாவின் திறமை மற்றும் AI திறன் பற்றி அறிய முடிவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நாம் அனைவரும் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே தேவையான தீர்வுகளை உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.
News February 17, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


