News March 2, 2026

SPORTS 360°: இந்திய வீரர் சாம்பியன்

image

*ISL கால்பந்தில் சென்னையின் – ஒடிசா அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது *உள்ளரங்க குண்டு எறிதலில் 17.09 மீ தூரம் குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை கிருஷ்ணா ஜெயசங்கர் படைத்துள்ளார் *சர்வதேச தடகளம் 60மீ தடை தாண்டுதல் சாம்பியன்ஷிப்பில் ஷெகாவத் முதலிடம் பிடித்தார் *இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா ராஜிநாமா

Similar News

News March 2, 2026

கண் பார்வையை பாதுகாக்க ஈஸி டிப்ஸ்!

image

➤வைட்டமின் A அடங்கிய கீரைகள், மீன்கள், கேரட், நெல்லிக்காய், நட்ஸ் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள் ➤UV கதிர்கள் கண்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும். வெளியில் செல்லும்போது நல்ல சன்கிளாஸ் அணிந்து செல்லுங்கள். ➤நீண்ட நேரத்திற்கு மொபைல், கம்ப்யூட்டர், டிவி பார்க்க வேண்டாம். ➤போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள், உறங்குங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

News March 2, 2026

பிளாப் ஆனதா TVK செயல்வீரர்கள் கூட்டம்?

image

தேர்தலையொட்டி 234 தொகுதிகளிலும் TVK செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்ற தொகுதிகளை தவிர பல தொகுதிகளில் ஆலோசனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. சில தொகுதிகளில் விஜய் பட பாடல்களை ஒலிக்கவிட்டு கட்சியினர் ஆடிக்கொண்டிருந்தனராம். கட்சி ரீதியாக 1,100 ஒன்றியங்கள், 5,200 கிளை கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்காததே இதற்கு காரணமாம்.

News March 2, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $141 (இந்திய மதிப்பில் ₹12,842) உயர்ந்து $5,372.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $3 உயர்ந்து $95.59-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!