News November 23, 2025
SPORTS 360°: ஆஸி., ஓபன் இறுதி போட்டியில் லக்ஷயா சென்

*இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. *ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேறினார். *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI தொடரை 3-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது. *அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் வங்கதேசம் அணி உள்ளது.
Similar News
News February 1, 2026
FLASH: ஜாம்பவானை வீழ்த்தி சாம்பியனான அல்காரஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (22) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் டென்னிஸ் ஜாம்பவானான ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் 7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்காரஸ் முத்தமிட்டார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. நீங்களும் வாழ்த்தலாமே!
News February 1, 2026
அரசு மாதிரிப் பள்ளிகளில் நாளை முதல் அட்மிஷன்

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் இம்மாதம் 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
News February 1, 2026
உப்புக்கு Expiry Date இருக்கா?

உப்பில்லாமல் உணவின் சுவை கெட்டுப்போகலாம், ஆனால் உப்பு எப்போதும் கெட்டுப்போகாது. சுத்தமான உப்பில் பாக்டீரியா மற்றும் கிருமிகளால் வளரவே முடியாது. அதில் இருக்கும் அயோடின் காலப்போக்கில் கரைந்துபோய், அதன் சத்து குறையுமே தவிர, மற்றப்படி உப்பு கெட்டுப்போகாது. எவ்வளவு நாள்களில் அந்த சத்து குறையும் என்பதை சுட்டிக்காட்டவே உப்பு பாக்கெட்டுகளில் Expiry Date கொடுக்கப்படுகிறது. பலருக்கும் தெரியாது SHARE THIS.


