News April 21, 2024
போர் சூழலில் ஆன்மிக போதனைகள் தேவை

எதிர்காலத்திற்கான புதிய பயணம் தேர்தலிலிருந்து தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாவீர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று பேசிய அவர், உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் ஆன்மிக குருக்களின் போதனைகள் தேவைப்படுவதாகக் கூறினார். யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரியத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. புதிய தலைமுறை இளைஞர்களும் நாட்டின் பாரம்பரியத்தை அடையாளமாகக் கருவதாகக் கூறினார்.
Similar News
News January 3, 2026
RSS துணை ராணுவப்படை அல்ல: மோகன் பகவத்

RSS-க்கு எதிராக போலியான பிம்பம் கட்டமைக்கப்படுவதாக மோகன் பகவத் கூறியுள்ளார். சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு RSS பாடுபடுவதாக குறிப்பிட்ட அவர், மீண்டும் அந்நிய சக்தியின் பிடியில் இந்தியா சிக்கிவிடக்கூடாது என்பதே தங்களது அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்தார். சீருடை அணிந்து, பேரணி செல்வதால் RSS-ஐ துணை ராணுவப்படை என நினைப்பது மிகவும் தவறானது எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 3, 2026
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.92 அதிகரித்து $4,332.36-க்கு விற்பனையாகிறது. முந்தையை சில நாள்கள் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $1.35 அதிகரித்துள்ளது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலையில் ஏற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 3, 2026
ஆயுளை அதிகரிக்கும் சனிக்கிழமை விரதம்!

நவக்கிரகங்களில் சனிபகவான் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கத்தை பொறுத்தே நம் ஆயுட்காலம் அமையுமாம். இதில், சனிக்கு அதிபதியாகவும், அக்கிரகத்தை கட்டுப்படுத்துபவராகவும் பெருமாள் விளங்குகிறார். ஆகையால், நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணினால் சனிக்கிழமை விரதம் கடைபிடியுங்கள். காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் இருந்து, அதன்பிறகு பெருமாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


