News June 26, 2024
வந்தே பாரத் ரயில்களின் வேகம் விரைவில் குறைப்பு

வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை விரைவில் குறைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. சமீப நாள்களாக பயணிகள் ரயில்கள் சந்திக்கும் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு, ரயிலின் வேகமும் ஒரு காரணம் எனக் கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட, வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
தென்காசி: ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

தென்காசி மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு <
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News March 7, 2026
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
News March 7, 2026
BIG NEWS: தமிழகத்தை உலுக்கிய ரேப் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக், தவசி மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்றே அறிவிக்கப்படவுள்ளது.


