News January 2, 2025
இறந்தவருக்கு உயிர் கொடுத்த Speed Breaker!

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பாண்டுரங் (65). கடந்த டிச.16ல் மாரடைப்பு ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறவே, சடலத்தை ஆம்புலன்ஸில் வைத்து கொண்டுவந்துள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது, அவரது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளது. இதையடுத்து வேறு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவர் உயிர்பிழைத்து வந்துள்ளார்.
Similar News
News January 8, 2026
ஆரஞ்சு அலர்ட்.. 2 நாள்களுக்கு கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(ஜன.9) திருவாரூர், நாகை ஆகிய மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடுமாம். மேலும், ஜன.10-ல் நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News January 8, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. அரசு இன்று முக்கிய அறிவிப்பு

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன்(ஜன.8) நிறைவடைகிறது. ஜன.31-ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <
News January 8, 2026
கடைசி நேரத்தில் பராசக்திக்கு வந்த ஷாக்!

சுதா கொங்கரா இயக்கத்தில் SK, ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் இந்த படத்திற்காக ஸ்பெஷல் பீரிமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தியேட்டரில் மொத்தமுள்ள 905 சீட்களில் வெறும் 16 மட்டுமே புக்கான நிலையில், ஷோ கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


