News April 11, 2025
மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: வருந்திய துரைமுருகன்

மாற்றுத்திறனாளிகள் <<16019356>>குறித்த பேச்சுக்கு<<>> அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக துரைமுருகன் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்நிலையில், தனது பேச்சுக்காக துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். பொன்முடியை தொடர்ந்து தனது பதவியும் பறிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News December 31, 2025
BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை ₹960 குறைந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தாறுமாறாக குறைந்துள்ளது. காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 குறைந்த நிலையில், மாலையில் ₹560 குறைந்தது. இன்று மட்டும் ₹960 குறைந்ததால், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹99,840-க்கும், கிராமுக்கு ₹12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News December 31, 2025
மற்ற எல்லாவற்றிலும் பாஜக அரசுக்கு ஆர்வம்: கனிமொழி

தமிழக பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ₹2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, TN-ல் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது என MP கனிமொழி விமர்சித்துள்ளார். மதுரைக்கு இன்று வந்த மத்திய அமைச்சர் <<18721056>>தர்மேந்திர பிரதான்<<>>, திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான தீர்ப்பை தமிழக அரசு ஏற்காதது முட்டாள்தனம் என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடியாக தற்போது கனிமொழி இக்கருத்தை கூறியுள்ளார்.
News December 31, 2025
உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ வரவேற்ற கிரிபாட்டி!

உலகிலேயே முதலாவதாக கிரிபாட்டி நாட்டின் கிறிஸ்துமஸ் தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவில் 7,500 மக்கள் வசிக்கின்றனர். இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்துள்ளது. நியூசிலாந்தின் சில பகுதிகளிலும் விரைவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தியா அடுத்த 8:30 மணி நேரத்தில் 2026-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளது.


