News April 24, 2024
கர்நாடகாவில் காங்கிரசுக்கு விசிக ஆதரவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் விசிக 2 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழகம் தவிரத் தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகத்தில் 6 தொகுதிகளிலும், கேரளத்தில் 3 தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகத் துணை முதல்வர் சிவக்குமாரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 13, ஐப்பசி 27 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶சிறப்பு: குரு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுதல்.
News November 13, 2025
பிஹாரில் NDA தான் வெல்லும்.. ஆனால் CM தேஜஸ்வி!

இன்று வெளியான <<18269712>>Axis My India <<>>கருத்து கணிப்பிலும் பிஹாரில் NDA கூட்டணி தான் வெல்லும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த CM ஆக யார் வர வேண்டும் என்ற கருத்துக்கணிப்பில் நிதிஷ்குமாருக்கு 22% பேரும், தேஜஸ்வி யாதவ்விற்கு 34% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு 4% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
News November 13, 2025
திருமணத்திற்கு Expiry Date வேண்டும்: கஜோல்

திருமணத்திற்கு Expiry Date மற்றும் Renewal ஆப்ஷன்கள் இருக்க வேண்டும் என நடிகை கஜோல் தெரிவித்துள்ளார். நீங்கள் சரியான நபரை தான் கரம் பிடித்திருக்கிறீர்களா என்பது தெரியாத போது, Renewal ஆப்ஷன் பயன்படும். சண்டைகள், முரண்கள் நிறைந்த மண வாழ்க்கையில் நீங்கள் நீண்ட நாள்கள் கஷ்டப்படக் கூடாது என்பதாக Expiry Date ஆப்ஷன் பயன்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது கருத்தை நீங்க எப்படி பார்க்கிறீங்க?


