News March 15, 2025
சிறப்பு கொள்முதல் முறை… ரத்து செய்தது டாஸ்மாக்

குடோன்களில் இருப்பு நிலவரத்தை வைத்து மாவட்ட மேலாளர்களே மதுபான நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் சிறப்பு கொள்முதல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. விற்பனையை அடிப்படையாக வைத்து இனி கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. போதிய வரவேற்பு இல்லாத போதும் சில மதுபான நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2025
WPL: இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்?

இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும், இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளது. ஆல்ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ் ஆகியோருடன் MI அணி வலுவாக உள்ளது. இந்த சீசனில் மும்பையை டெல்லி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. JioHotstar, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலையில் காணலாம்.
News March 15, 2025
இன்றைய பொன்மொழிகள்!

▶ கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது. ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீ தாங்கித் தாங்கி வலுவைப் பெறு. ▶போட்டியும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே. ▶விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது கேடு – பேரறிஞர் அண்ணா.
News March 15, 2025
பட்ஜெட் அதிருப்தி – போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அதுதொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 23-ல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மார்ச் 30-ல் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.