News September 3, 2025
விராட் கோலிக்கு மட்டும் சிறப்பு அனுமதியா?

ஆஸி. தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தனது உடல்தகுதியை நிரூபித்துள்ளார். ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள Centre of Excellence-ல் உடற்தகுதி சோதனையில் பங்கேற்றனர். லண்டனில் வசிக்கும் கோலி அங்கேயே உடற்தகுதி சோதனை மேற்கொண்டுள்ளார். அவர் பிசிசிஐ-யிடம் சிறப்பு அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு வீரருக்கு சலுகை வழங்குவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News September 3, 2025
கூட்ட நெரிசலுக்கு GOOD BYE.. இனி படகில் ஜாலியா போலாம்!

மக்கள் நெரிசல் அதிகமுள்ள சென்னையில் வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் படகு சேவையை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகு போக்குவரத்து வரப்போகிறதாம். இதற்கான படகு நிலையங்கள், பணிமனைக்கான இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
News September 3, 2025
Beauty Tips: இரவில் தலைக்கு குளிப்பவர்களின் கவனத்திற்கு

காலையில் எழுவதற்கு சோம்பேறித்தனமாக இருப்பதால் சிலர் இரவிலேயே தலைக்கு குளிக்கின்றனர். இப்படி தலைக்கு குளித்துவிட்டு தூங்குவதால் தலை முடிக்கு சில பிரச்னைகள் வருகிறது. இரவில் தலைக்கு குளித்துவிட்டு ஈரத்தலையுடன் தூங்குவதால் பொடுகு தொல்லை ஏற்படுமாம். இதனால் நாளடைவில் முடி உதிர்வு அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News September 3, 2025
BREAKING: உதயநிதி மகன் இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு

ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவன CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த தகவல் உறுதியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லிக்கடை’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதில், ரெட் ஜெயண்ட் மூவிஸ், இன்பன் உதயநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.