News June 28, 2024

விஜயபாஸ்கரை கைது செய்ய கேரளா விரைந்தது தனிப்படை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். ₹100 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, விஜயபாஸ்கர் தலைமறைவானார். இதையடுத்து, அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கேரளாவில் பதுங்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

Similar News

News March 27, 2026

ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள் ஒத்திவைப்பு

image

ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கோரிக்கையின் பேரில், இந்த காலக்கெடு ஏப்ரல் 6 இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஈரானுடனான பேச்சுவார்த்தை சாதகமாக சென்று கொண்டிருப்பதாகவும், போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், டிரம்பின் இந்த முடிவு நிம்மதியை தந்துள்ளது.

News March 27, 2026

கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக

image

தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. மொத்தமாக 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதி விபரம்: காங்கிரஸ்(28), தேமுதிக(10), விசிக(08), சிபிஐ(5), சிபிஎம்(5), மதிமுக(4), ஐயூஎம்எல்(2), மமக(2), கொமதேக(2), எஸ்டிபிஐ(1), முக்குலத்தோர் புலிப்படை(1), மஜக(1) தமிழர் தேசம்(1)

News March 27, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 27, பங்குனி 13 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: நவமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!