News June 26, 2024
விஜயபாஸ்கரை கைது செய்ய விரைந்தது தனிப்படை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, தமிழக தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில், பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் சொத்துகளை மிரட்டி வாங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை, கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 16, 2025
6-9 வகுப்புகள்.. அரையாண்டு தேர்வு அட்டவணை

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. *டிச.15- தமிழ், டிச.16-ஆங்கிலம், டிச.17-விருப்ப மொழி, டிச.18-கணிதம், டிச.19-உடற்கல்வி, டிச.22-அறிவியல், டிச.23-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறையாகும்.
News November 16, 2025
பாலையாவை 3D-ல் பார்க்க ரெடியா?

இயக்குநர் போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘அகண்டா 2’ திரைப்படம் டிச.5-ல் வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 22 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழுவின் இந்த அறிவிப்பால் குஷியில் இருக்கும் ரசிகர்கள், பனிமலையில் பாலையா சிவ தாண்டவம் ஆடும் காட்சிகளை 3D-ல் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
News November 16, 2025
BREAKING: அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 – டிச.23 வரை தேர்வு நடைபெறும். 6 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.15 – 23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிச. 24 முதல் ஜன.4 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாணவர்களே, தேர்வுக்கு தயாரா?


