News August 13, 2024

பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம்

image

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு (OH) ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க, 4 நாள்கள் சிறப்பு முகாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தென்சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆகஸ்ட் 20-23 வரை முகாம் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள், OH தேசிய அடையாள அட்டை, ஆதார், PHOTO, Phone NO, UDID அட்டை, குடும்ப அட்டையுடன் செல்லவேண்டும். இந்த தகவலை பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு கூறவும்.

Similar News

News August 13, 2025

டிரம்ப்பை சந்திக்கும் PM மோடி

image

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா பொது சபை கூட்டத்தில் PM மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்னைகளுக்கு மத்தியில் PM அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

News August 13, 2025

ஆக.16 லீவ்! ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் கிடையாது

image

வாரந்தோறும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதனால், அன்றைய தினம் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அரசு தரப்பில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 13, 2025

முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி

image

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என CM உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என சாடியுள்ளார். 10.62 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோதும், ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ₹18,498 கோடி​தான் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!