News May 17, 2024
இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்கள், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
ராணிப்பேட்டை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
News December 30, 2025
‘விஜய் தேர்தலுக்கு பின் நடிக்க வருவார்’

கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு முழு அரசியல்வாதி ஆகியுள்ளார் விஜய். இதனால் கவலையில் உள்ள அவரது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார், நடிகை சிந்தியா லூர்டே. புது இயக்குநர் தினேஷ் தீனா இயக்கும் ‘அனலி’ டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகியாக நடிக்கும் சிந்தியா, 2 வருடத்திற்குள் விஜய் மீண்டும் படத்தில் நடிப்பார் எனவும், அவருடன் நிச்சயம் நடிப்பேன் என்றும் பேசியுள்ளார்.
News December 30, 2025
புதிய சாதனை படைத்த ஜேசன் ஹோல்டர்

T20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார். 2025-ல் மட்டும் அவர், 67 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ரஷித் கானின் சாதனையை (96 விக்கெட்கள், 2018) அவர் முறியடித்துள்ளார். 3-வது இடத்தில் டுவைன் பிராவோ (87 விக்கெட்கள், 2016) உள்ளார். ஹோல்டரை GT அணி, IPL மினி ஏலத்தில் ₹7 கோடிக்கு வாங்கியுள்ளது.


