News March 28, 2024
இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி இன்று முதல் மார்ச் 30 வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மார்ச் 28ல் 505, மார்ச் 29ல்300, மார்ச் 30ல் 345 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருவுக்கு மார்ச் 28,29,30ல் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Similar News
News March 20, 2026
BREAKING: ரூபாய் மதிப்பு கடும் சரிவு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக ₹93 ஆக சரிந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதும் ரூபாய் மதிப்பின் சரிவுக்கு காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
News March 20, 2026
NDA கூட்டணிக்கு ஆதரவு

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு சிறு கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் நயினாரை நேரில் சந்தித்து NDA கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தனர். அத்துடன், 234 தொகுதிகளிலும் NDA கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.
News March 20, 2026
இந்த சீசனில் 3,000 ரன்களை அடிக்க விரும்புகிறேன்.. வைபவ்

வரும் IPL தொடரில் 2,000 முதல் 3,000 ரன்களை அடிப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி நகைச்சுவையாக கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சீசனில் உங்களின் ரன் டார்கெட் என்ன என கேட்டதற்கு, வைபவ் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், தனிப்பட்ட சாதனைகள் முக்கியம் அல்ல, கோப்பையை வெல்வதே லட்சியம் எனவும் பேசியுள்ளார். இந்த சீசனில் வைபவ் எவ்வளவு ரன்கள் அடிப்பார் என நினைக்கிறீங்க?


