News December 19, 2024

நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு முடிகிறது. 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். இதற்காக, நாளை முதல் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Similar News

News March 5, 2026

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

image

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 5, 2026

2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

image

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

error: Content is protected !!