News April 15, 2024
சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்

சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 10,000 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
Similar News
News April 29, 2025
150 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த BLINKIT.. ஏன் தெரியுமா?

நாளை மறுநாள் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 150 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது BLINKIT நிறுவனம். அதீத வெப்பத்தின் காரணமாக மதியம் 12 – 4 மணி வரை இடைவேளை, காத்திருப்பு இடங்களில் நிழல் கூடாரங்கள், தண்ணீர் மற்றும் ஃபேன், சம்மருக்கு ஏற்ற காட்டன் யூனிஃபார்ம்கள் ஆகியவற்றை கேட்டு போராடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, Gig ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கமெண்ட் என்ன?
News April 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 29 – சித்திரை- 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.
News April 29, 2025
பிரபல இயக்குநர் ஷாஜி N கருண் காலமானார்

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி N கருண் (73) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள சினிமாவுக்கு தேசிய, சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். இவர் இயக்கிய Piravi (1988), vanaprastham (1999), kutty srank (2009) திரைப்படங்களுக்கு தேசிய விருதினை பெற்றவர். அதுமட்டுமல்ல, Piravi, Swaham, vanaprastham ஆகிய திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றன.