News June 5, 2024
வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் 835 பேருந்துகளும், 8ம் தேதி 570 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோல் சென்னை திரும்ப வசதியாக 9ம் தேதி 705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்தார்.
Similar News
News December 4, 2025
சிவகங்கை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
BREAKING: ஒரு மணி நேரத்தில் மாற்றிய செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்த பதிவை, <<18466560>>செங்கோட்டையன் <<>>பிற்பகல் 12.26 மணிக்கு நீக்கியிருந்தார். தவெக கொள்கை தலைவர்கள் உடன் MGR, ஜெ., புகைப்படமும் இருந்ததால் நீக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, கட்சி மாறிய உடன் ஜெ., போட்டோவை நீக்கியதாக பலரும் கமெண்ட் செய்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட போஸ்டரை மீண்டும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News December 4, 2025
வா வாத்தியார் படத்தை வெளியிட தடை!

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வரும் 5-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை கட்டிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என அர்ஜுன்லால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்தி, ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.


