News February 1, 2025
பட்ஜெட்டில் ஸ்பெஷல் கவனிப்பு: நேற்று ஆந்திரா, இன்று பிஹார்

கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில் ஆந்திரப் பிரதேசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அப்போது ஆந்திராவில் நடக்க இருந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அப்படி அமைந்தது. இந்த முறை பெரும்பாலான திட்டங்கள் பிஹாரை மையமாக கொண்டு அறிவிக்கப்பட்டு வருகிறது. பிஹாரில் இந்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தான் காரணமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். உங்க கருத்து?
Similar News
News March 28, 2026
புதுச்சேரி: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…
News March 28, 2026
Lunch-க்கு பிறகு ஒரு கிளாஸ் மோர்.. இவ்வளோ நன்மைகளா!

மதிய உணவிற்கு பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால், *லாக்டிக் அமிலம், ஜீரணத்திற்கு உதவுகிறது. உப்புசத்தை தடுக்கிறது *மசாலா நிறைந்த உணவை சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சலை போக்க மோர் உதவுகிறது *எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்கிறது *பயோஆக்டிவ் புரோட்டீன்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது *வெயிலில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. SHARE IT.
News March 28, 2026
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேற்கு ஆசிய போர் காரணமாக ரூபாயின் மதிப்பு ₹94.82 ஆக உள்ளது. இது வார தொடக்கத்தில் எட்டியிருந்த முந்தைய குறைந்தபட்ச சாதனையான ₹93.98-ஐ விடவும் மோசமான நிலையாகும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடந்து வீழ்ச்சியடைந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


