News June 27, 2024
அவதூறு மட்டுமே பேசுகிறார்: செல்வப்பெருந்தகை

அவதூறுகள் மட்டுமே அண்ணாமலை பேசுவதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திராவின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாத பாஜக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று விமர்சித்த அவர், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை, வரலாற்றுத் திரிபு வாதங்களை நிறுத்திக் கொள்வது நல்லது என்று எச்சரித்துள்ளார். முன்னதாக, இந்திராவை அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
Similar News
News March 3, 2026
சந்திர கிரகணமும் அறிவியலும்

<<19280605>>சந்திர கிரகணம்<<>> என்பது ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாகும். சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. சந்திர கிரகணத்தால் எந்த பேரழிவோ, உடல்நல பாதிப்போ ஏற்படாது என்கின்றனர் விஞ்ஞானிகள். எல்லா நாள்களிலும் ஏற்படுவது போலவே தான், கிரகணம் அன்றும் உடல்நலப் பிரச்னைகளும், தனிப்பட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்கின்றனர். மற்றவை எல்லாம் நம்பிக்கை தானாம். SHARE IT
News March 3, 2026
ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது இனி ரொம்ப ஈசி!

ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்க்க, இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். அதனை வீட்டில் இருந்தபடியே செய்யும் வகையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. www.tnpds.gov.in இணையதளம் சென்று, ‘புதிய உறுப்பினர் பெயரை சேர்க்க’ ஆப்சனை கிளிக் செய்து விவரங்களை உள்ளிடுங்கள். மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டால் உங்கள் விவரம் அரசுக்கு சென்றுவிடும். அதன்பின், 1 வாரத்திற்குள் பெயர் இணைக்கப்படும். SHARE
News March 2, 2026
இனிதான் சம்பவமே இருக்கு.. டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். US இன்னும் பெரிய தாக்குதலைத் தொடங்கவில்லை. விரைவில் ஒரு பெரிய தாக்குதல் நடக்கப் போகிறது. ஈரான் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். போர் அதிக நேரம் நீடிப்பதை நான் விரும்பவில்லை. 4 வாரங்களில் அது முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்குவது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் CNN-க்கு டிரம்ப் பேட்டி அளித்துள்ளார்.


