News August 7, 2024
செப்.9ல் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக பாபு முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்.09க்கு ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக இன்று(ஆக.07) உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
நெல்லை: மாடு மோதிய விபத்தில் உயிரிழப்பு

வி கே புரம் அருகே உள்ள அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் சேவியர் (38). ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த 17ஆம் தேதி அம்பலமானபுரம் சாலையில் பைக்கில் சென்ற போது மாடு மோதியதில் படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
நெல்லை: இரு தரப்பினரிடையே திடீர் மோதல்

நெல்லை ஸ்ரீபுரம் அருகே ஊருடையார் புரத்தில் இரு பிரிவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பிரச்சனை உருவான நிலையில் ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
News December 22, 2025
நெல்லை: 931 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும்
நேரடி சார்பு ஆய்வாளர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாநகரில் 4 இடங்களில் 3484
விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 2553
விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 931 பேர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


