News August 28, 2025
SPACE: கோள்களின் பட்டியலில் இருந்து Pluto நீக்கப்பட்டது ஏன்?

2006-ல் International Astronomical Union ப்ளூட்டோவை கோள்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. பொதுவாக ஒரு கிரகம், கோளாக அங்கீகரிக்கப்பட 3 விஷயங்கள் வேண்டும். 1.அக்கோள் சூரியனை சுற்றிவர வேண்டும். 2.போதுமான அளவு கிராவிட்டி வேண்டும். 3.தன்னுடைய சுற்றுவட்ட பாதையில் எந்த தடையும் இல்லாமல் இருத்தல் வேண்டும். இதில் 3வது விஷயத்தை Pluto-வால் செய்யமுடியவில்லை. எனவே அது Dwarf Planet என அறிவிக்கப்பட்டது.
Similar News
News March 11, 2026
இனி மொபைல் டேட்டாவிற்கும் வரி!

மத்திய அரசு மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்த ஆய்வு செய்யுமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாம். 1 GB டேட்டாவிற்கு ₹1 வரி விதித்தால் கூட, ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி வருவாய் கிடைக்கும். வரி வருவாயுடன் சேர்த்து, அதிகப்படியான ஸ்க்ரீன் டைமை குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாம். ஆலோசனை நிலையில் உள்ள இத்திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
News March 11, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் காலையில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் தற்போது 1 அவுன்ஸ்(28g) $45(₹4,138) குறைந்து $5,189-க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் $3 குறைந்து $86-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 11, 2026
சிலிண்டருக்கு தமிழக அரசு 55% வரியா? Fact Check

சமையல் எரிவாயு விற்பனையில் TN அரசு 55%-ம், ஒன்றிய அரசு 5%-ம் வரி விதிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று TN Fact Check விளக்கமளித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே GST வரி விதிக்கப்படுகிறது. அதாவது சிலிண்டரின் விலை ₹827.14, மாநில அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%), மத்திய அரசின் வரி விதிப்பு ₹20.68 (2.5%) என மொத்தம் ₹868.5 வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.


