News August 30, 2025
SPACE: அறிவியலால் விளக்க முடியாத விண்வெளி மர்மங்கள்

பெரும்பாலான இயற்கை நிகழ்வுகளை அறிவியல் விளக்கினாலும், விண்வெளியில் உள்ள பல மர்மங்களுக்கு இன்றளவும் பதில்கள் இல்லை. நிலவு தோன்றியது எப்படி? கருந்துளைக்குள் என்ன நடக்கும்? புவி ஈர்ப்பு விசை உருவானது எப்படி? விண்வெளி எவ்வளவு பெரியது? உயிர்கள் தோன்றியது எப்படி? வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? என அறிவியலால் விளக்கமுடியாத புதிர்கள் இருக்கின்றன. நீங்கள் அறிய விரும்பும் மர்மம் என்ன? SHARE IT!
Similar News
News August 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 444
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
News August 31, 2025
CM வேட்பாளர்! ராகுலுக்கு ஷாக் கொடுத்த தேஜஸ்வி

பிஹாரில் தேர்தல் அலை வீசி வரும் நிலையில் அங்கு இந்தியா கூட்டணியின் CM வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில், தன்னை முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவித்துக் கொண்டார். நிதிஷ் குமார் தன்னை காப்பி அடித்து திட்டங்களை நிறைவேற்றுதாக பேரணியில் பேசிய அவர், உங்களுக்கு Orginal CM வேண்டுமா? Duplicate CM வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
News August 31, 2025
மீண்டும் இந்திய அணிக்கு தோனி MENTOR?

வரும் 2026 டி20 உலககோப்பைக்கு தோனியை மென்டராக செயல்பட வைக்க BCCI முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 2021 உலக்கோப்பையில் தோனி மென்டராக செயல்பட்டுள்ளார். ஆனால், கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருப்பதால், இம்முறை அந்த வாய்ப்பை தோனி ஏற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. பலமுறை தோனி குறித்து கவுதம் கம்பீர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.