News August 9, 2025
விண்வெளி சாதனை நாயகன் காலமானார்!

விண்வெளி வீரர் ஜிம் லொவல்(97) காலமானார். நிலவுக்கு சென்ற அப்போலோ 13 விண்வெளி பயணத்தின் தளபதியாக பணியாற்றிய இவர், சுமார் 715 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் இருந்துள்ளார். 1962-ம் ஆண்டு NASA-வில் பணிக்கு சேர்ந்த ஜிம், ஜெமினி 7 & ஜெமினி 12 விண்வெளி பயணங்களிலும் பணிபுரிந்துள்ளார். ஒரு தலைமுறைக்கே முன்மாதிரியாக திகழ்ந்த ஜிம் லொவலின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News August 9, 2025
பாமக மெகா கூட்டணி அமைக்கும்: அன்புமணி

பாமக தொண்டர்கள் விருப்பப்படி மெகா கூட்டணி அமைக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு வழிகாட்டி என்றால் ராமதாஸ் தான் என்றும், அவர் இங்கு இல்லை என்றாலும், அவரது உள்ளம் இங்கு தான் உள்ளதாகவும் கூறினார். வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால் 40 – 50 MLA-க்களை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
News August 9, 2025
கணவரை பிரிகிறேனா? சங்கீதா பரபரப்பு Statement!

நடிகை சங்கீதா இன்ஸ்டாவில் ‘சங்கீதா கிரிஷ்’ என்ற தனது Profile பெயரை ‘சங்கீதா சந்தரம்’ என மாற்றியது, பெரும் வைரலாக மாறி, அவர் விவாகரத்து செய்ய போகிறார் என பேசப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நியூமராலஜிக்காக பெயரை இவ்வாறு மாற்றியிருப்பதாக சங்கீதா தற்போது விளக்கமளித்துள்ளார். இவருக்கும் பாடகர் கிருஷுக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News August 9, 2025
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு விளக்கம்

ATM-களில் ₹500 நோட்டுகள் செப்.30 முதல் நிறுத்தப்படும் என்றும் அதன்பின் ₹500 நோட்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம், அது வதந்தி எனத் தெரிவித்துள்ளது. ATM-களில் செப்டம்பருக்குள் ₹100, ₹200 நோட்டுகள் 75% கிடைப்பதை உறுதி செய்யவும், 2026 மார்ச்சில் அதனை 90%ஆக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.