News August 14, 2024
தென்னிந்திய சினிமா அற்புதமானது

சினிமாவைப் பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது என லோகார்னோ திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் ஜியோனா நாசரோவ் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் இந்த விழா நடைபெறும் நிலையில், இந்த ஆண்டிற்கான விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தென்னிந்தியர்களை சிறந்த கதை சொல்லிகளாக பார்க்கிறேன், அவர்களிடம் சிறந்த கதை உள்ளது என புகழ்ந்துள்ளார்.
Similar News
News December 5, 2025
பிரித்து ஆளும் கொள்கை உடைய திமுக: தமிழிசை

தமிழ் வேறு இந்து மதம் வேறு என்று கூறிய சட்ட அமைச்சர் ரகுபதிக்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ் என்றும், தமிழையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் பிரித்தாலும் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று X-ல் தமிழிசை பதிவிட்டுள்ளார்.
News December 5, 2025
பாலைய்யா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

இன்று வெளியாகவிருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2 தாண்டவம்’ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்யமுடியவில்லை என்றும், இது தங்களுக்கு மிகவும் கடினமான தருணம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் பாலைய்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக தொழில்நுட்ப பிரச்னையால் ‘அகண்டா 2’ பிரீமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 5, கார்த்திகை 19 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12.15 AM – 1:15 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


