News September 8, 2025
வரலாற்று தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ODI-யில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது. ENG நிர்ணயித்த 415 என்ற இமாலய ஸ்கோரை துரத்திய அந்த அணி வெறும் 72 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ஆவேசமாக பந்துவீசிய ENG-யின் ஆர்ச்சர் 4 விக்கெட் வீழ்த்தினார். முடிவில் 342 ரன்கள் வித்தியாசத்தில் SA தோற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இதுதானாம்.
Similar News
News September 8, 2025
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவதாகவும், இந்த தொகை எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள தகவல் மகளிருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
News September 8, 2025
செப்டம்பர் 8: வரலாற்றில் இன்று

*1944 – இரண்டாம் உலகப் போரில் வி-2 ஏவுகணை மூலம் லண்டன் நகரம் மீது தாக்குதல். *1946 – பல்கேரியாவில் முடியாட்சி ஒழிப்பு. *1954 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது. *2006 – மகாராஷ்டிரா, மாலேகான் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொலை. *2010 – நடிகர் முரளி மறைந்த நாள்.
News September 8, 2025
மிஷ்கினால் கண்கலங்கிய பெற்றோர்

மாணவியின் கல்விச் செலவை ஏற்ற இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனியார் டிவி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள மிஷ்கின், அதில் போட்டியாளரான திஷாதனாவின் நான்கரை ஆண்டு கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தார். மேலும் திஷாதனாவிடம் அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாம் எனவும் தானே மாஸ்டர்ஸ் படிப்பதற்கான பணத்தை கட்டுவதாகவும் உறுதியளித்தார். இதை கேட்ட திஷாதனாவின் பெற்றோர்கள் கண் கலங்கினர்.