News October 22, 2025
மகளிர் உலகக்கோப்பையில் தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை

நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தெ.ஆப்பிரிக்கா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. WWC-ல் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்களை(11) விளாசி அந்த அணி அசத்தியுள்ளது. ஏற்கெனவே இதே தெ.ஆப்பிரிக்கா அணி, 2017-ல் 10 சிக்சர்களை அடித்திருந்தது. அவர்களே தங்களது சாதனையை 8 ஆண்டுகள் கழித்து தகர்த்துள்ளனர். 2-வது இடத்தில் 9 சிக்சர்களுடன் நியூசிலாந்து உள்ளது.
Similar News
News January 20, 2026
திருச்சி: துன்பங்கள் தீர்ப்பாள் சமயபுரத்தாள்!

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் எல்லா நாட்களும் திருவிழா நாட்களே!. இங்கு தினந்தோறும் ஆயிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் வழிபட்டால் இதுவரை இருந்த தடைகள், சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.
News January 20, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. மகிழ்ச்சியான செய்தி

ஜன நாயகன் பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை <<18907367>>சென்னை ஐகோர்ட்<<>> தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ள நிலையில், படம் விரைவில் வெளியாகும் என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. நாளை (அ) நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் அளித்த புகாரின்பேரில் படத்தின் ரிலீஸை நிறுத்துவது சட்ட ரீதியாக தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
தென்னாப்பிரிக்காவுடன் மல்லுக்கட்டும் இந்தியா!

ஜூனில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்.17-ல் தொடங்கி ஏப்.27-ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை ஃபைனலுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ளதால், இந்த டி20 தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.


