News February 2, 2025

கிரிக்கெட்டில் ராசியே இல்லாத தென்னாப்பிரிக்கா!

image

விளையாட்டிற்கும், லக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், இந்த தகவல் கொஞ்சம் அதனை நம்பவைக்கிறது. அனைத்து ஃபார்மட் கிரிக்கெட் போட்டியிலும் துரதிருஷ்டம் தென்னாப்பிரிக்காவை துரத்தி வருகிறது. கடைசியாக விளையாட 4 T20 தொடர்களின் ஃபைனலில் அந்த நாடு தோல்வியை தழுவியுள்ளது. 2023, 2024 மகளிர் T20 பைனல், 2024 ஆண்கள் T20, இப்போது U19WT20 ஃபைனலிலும் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. அட கடவுளே…!

Similar News

News March 2, 2026

தவெக – காங்கிரஸ் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

image

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க காங்., முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், ஆதவ்வும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுவதால் இதுகுறித்த யூகங்கள் வலுத்துள்ளன. மேலும், இதுபற்றி காங்கிரஸாரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறதாம். அத்துடன் கூட்டணி பற்றிய முடிவை இன்று மாலைக்குள் சொல்லுமாறு காங்.,க்கு திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 2, 2026

விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. ஒருவர் உயிரிழப்பு

image

நடிகை தேவி பிரியா(44) கார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. பெரம்பலூர் அருகே கார் பஞ்சராகி நின்ற நிலையில், டிரைவர் முத்துகணேஷ் டயரை மாற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த மற்றொரு வாகனம் மோதி, முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். தேவி பிரியா காயமின்றி தப்பிய நிலையில், உதவியாளர் திவாகர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 2, 2026

1 ரூபாய் செலவில்லாமல் ₹7 லட்சம் கிடைக்கும்

image

ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். பணியில் இருக்கும் ஊழியர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் – ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE.

error: Content is protected !!