News April 14, 2025

மீண்டும் ஐசிசி பொறுப்பில் சவுரவ் கங்குலி..!

image

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான கமிட்டியில், VVS லக்‌ஷ்மன், ஹமித் ஹசன், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ், பவுமா, டிராட் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கமிட்டி, சர்வதேச போட்டிகளில் விதிகள் மாற்றம், நீண்ட கால முன்னேற்றம் குறித்த தனது பரிந்துரைகளை ஐசிசிக்கு வழங்கும்.

Similar News

News April 15, 2025

நிறை மாத கர்ப்பத்துடன் போட்டோ வெளியிட்ட நடிகை

image

சின்னத்திரை நடிகை தர்ஷனா அசோகன், தனது முதலாம் ஆண்டு திருமண தினத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ வெளியிட்டுள்ளார். நீதானே என் பொன் வசந்தம், கனா, கண்ட நாள் முதல் ஆகிய சீரியல்களில் நடித்த தர்ஷனா, கடந்த ஆண்டு இதே நாளில் அபிஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது கர்ப்பம் குறித்த அறிவிப்பை அவர் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

News April 15, 2025

தமிழ்நாட்டுல இவளோ பேருக்கு எய்ட்ஸ் இருக்கா!

image

தமிழகத்தில் 1,57,908 பேருக்கு HIV தொற்று (எய்ட்ஸ்) இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 25,000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். HIV தொற்று, பாலியல் உறவின் மூலம் மட்டுமே அதிகம் பரவுவதால், காண்டம் அணிவது போன்ற பாதுகாப்பான பாலியல் உறவை தேர்ந்தெடுங்கள். HIV தொற்றை குறைப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

News April 15, 2025

சாட்டை யூடியூப் – நாதக தொடர்பில்லை – சீமான்

image

சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், நாதக-வுக்கும் எந்த தொடர்புமில்லை என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள், அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார். அதில் வரும் கருத்துக்களுக்கு நாதக பொறுப்பேற்காது எனவும் சீமான் கூறியுள்ளார். துரைமுருகனின் சமீபத்திய செயல்பாடுகள், உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாக இந்த அறிக்கை வந்துள்ளது.

error: Content is protected !!