News April 6, 2024
பாகிஸ்தான் தேர்தலுக்கான வாக்குறுதிகள் போல தெரிகிறது

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து சமூகத்தை பிரிக்க நினைப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கான வாக்குறுதிகள் போல தெரிவதாக கூறிய அவர், மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் காங்கிரசின் மோசமான அரசியலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். தேசத்திற்காக பாஜக உழைப்பதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் பாஜகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.
Similar News
News January 15, 2026
தென்காசி : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <
News January 15, 2026
பொங்கல் நாளில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

தை பிறந்த முதல் நாளிலேயே அதிமுகவை நோக்கி முக்கியத் தலைவர் நகர்ந்து இருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் பணியை EPS தீவிரப்படுத்தி இருந்தார். அந்த வகையில் இன்று, அமமுக மாநில அமைப்பு செயலாளர் மாதவரம் தட்சிணாமூர்த்தி, EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 15, 2026
பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்: அருண் ராஜ்

உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் உன்னதமான பொங்கலை கொண்டாடும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் பொங்கல் பண்டிகையின் முக்கிய தத்துவம். இந்த தத்துவத்தின்படி, ‘பழைய ஆட்சி கழியட்டும், புதிய ஆட்சி மலரட்டும்’ எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


