News October 3, 2025
‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

‘அம்மா, என்ன மன்னிச்சிரு. எனக்கு வாழ விருப்பமில்ல. அப்பா இறந்த பிறகு, தாத்தா ஒவ்வொரு வாரமும் சண்டை போடுறாரு. நிம்மதியா வாழ விடமாட்டேங்கிறாரு. தாத்தாவுக்கு தண்டனை கிடைக்கணும்.’ தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிறுமி அஞ்சலி(17) கடைசியாக எழுதிய வரிகள் இவை. தந்தைவழி தாத்தா தொடர்ந்து தகராறு செய்ததால் மன உளைச்சலில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News March 14, 2026
காலி மதுபாட்டில்கள்.. அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை TN அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சென்னை HC உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில், டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என அரசு வாதிட்டது. ஆனால், திட்டத்தை மே 31-க்குள் அமல்படுத்த வேண்டும். தவறினால் பாட்டிலுக்கு ₹10 அபராதம் விதிக்கப்படும் என்று கோர்ட் எச்சரித்துள்ளது.
News March 14, 2026
தர்பூசணி வாங்கும்போது இதை மறக்காதீங்க!

*தர்பூசணியின் மேற்பரப்பில் உள்ள புள்ளி, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், அது நன்கு பழுத்திருக்கிறது என்றும்; வெள்ளையாக இருந்தால், அது இன்னும் பழுக்கவில்லை எனவும் அர்த்தம். *உருண்டை வடிவ பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டவை; நீள வடிவ பழத்தில் இனிப்பு குறைவாக இருக்கும். *பழத்தின் காம்பு நன்றாக காய்ந்து, மங்கலான பொலிவுடன் காணப்பட்டால், அது இயற்கையாக பழுத்திருக்கிறது என்று அர்த்தம். SHARE IT
News March 14, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 14, மாசி 30 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:45 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


