News July 3, 2024
மீண்டும் முதல்வராகும் சோரன்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு, சமீபத்தில் ஜாமின் வழங்கப்பட்டது. அவரது இல்லத்தில் இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், JMM சட்டமன்றக்குழு தலைவராக தேர்வானதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய முதல்வர் சம்பாய் சோரன் இன்றிரவு 8 மணிக்கு ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 22, 2025
விஜய் அரசியலிலும், ஸ்டாலின் ஷூட்டிங்கிலும் உள்ளனர்: பாஜக

விஜய் தனது அரசியல் வசனகர்த்தாவை மாற்றவேண்டும் என தமிழிசை கிண்டலாக தெரிவித்துள்ளார். விஜய்யின் ஸ்கிரிப்ட் சரியாக இல்லை என கூறிய அவர், ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களைப் போன்றவர்களிடம் சரித்திரம் குறித்து கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அரசியலில் இருந்து CM ஸ்டாலின் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.
News September 22, 2025
நண்பர்களுக்கு கடன் கொடுப்பீர்களா?

நண்பர்கள், உறவினர்களுக்கு கடன் கொடுத்தவர்களில் 73% பேருக்கு, பணம் திரும்ப வருவதில்லை என்கின்றது லெண்டிங் ட்ரீ நிறுவனத்தின் சர்வே. அதுமட்டுமல்ல, இதனால் உறவு பாதிக்கப்படுவதாக 25% பேரும், ஏன் கொடுத்தோம் என வருந்துவதாக 43% பேரும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும், எந்த பிணையமோ, ஒப்பந்தமோ, நிபந்தனையோ இல்லாமல் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. பின் இதுவே பிரச்னைக்கு காரணமாகிறது. உங்க அனுபவம் எப்படி?
News September 22, 2025
அமெரிக்காவின் H-1B-க்கு போட்டியாக சீனாவின் ‘K விசா’

உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்களை தங்கள் நாட்டில் பணியாற்ற ஈர்க்கும் வகையில் சீனா K விசாவை அறிமுகம் செய்கிறது. அக்.1 முதல் அமலுக்கு வரும் இந்த விசா அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் & கணிதம் (STEM) துறைகளை சார்ந்தவர்களுக்கு பொருந்தும். அண்மையில் H-1B விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்கா ₹88 லட்சமாக உயர்த்திய நிலையில், சீனாவின் அறிவிப்பு இதற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.