News September 2, 2025
விஜய் சேதுபதிக்கான கதையில் நடிக்கும் சூரி?

சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், சூரி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Similar News
News September 2, 2025
ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: H.ராஜா சாடல்

கடவுள் இல்லை எனக் கூறும் திமுக, 40,000 ஹிந்து கோயில்களை தன் கையில் வைத்துள்ளதாக H.ராஜா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச் செல்வதாக சாடினார். மேலும், திமுக ஆட்சியில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவர், இந்த அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களின் காணிக்கையில் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
News September 2, 2025
அஜித் சொன்ன விஷயம்; நின்றுபோன மங்காத்தா-2?

நடிகர் அஜித் கரியரின் டாப் மாஸ் படங்களில் மங்காத்தாவுக்கு சிறப்பான இடம் உண்டு. இப்படத்துக்கான ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் இருப்பதால், தயாரிப்பாளர் ஒருவர் மங்காத்தா 2-வுக்கான கதையை எழுத சொல்லி வெங்கட்பிரபுவை அணுகியிருக்கிறார். அவரும் குஷியில் வேலையை தொடங்க, இடையில் அஜித் ₹200 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், மங்காத்தா-2 என்ற பேச்சுக்கே இடமில்லை என தயாரிப்பாளர் விலகிவிட்டாராம்.
News September 2, 2025
SM விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுடன் பும்ராவை ஒப்பிட்டு பல சண்டைகள் சோஷியல் மீடியாவில்(SM) அவ்வப்போது நடைபெறும். ஆனால் இருவரும் வேறு வேறு காலகட்டத்தில் விளையாடியதால், ஒப்பிடுவது சரியாக இருக்காது என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் வித்தியாசமானது என கூறிய அவர், மார்டன் இராவின் சிறந்த பௌலர் பும்ராதான் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.